

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் குணரட்னம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரம் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணரட்ணம் நாகேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
எங்கள் அன்பு அப்பாவே!
நொடிப் பொழுதில் எமை
நோகவிட்டு சென்று விட்டீர்கள்!
ஆண்டு பதினொன்று ஆனதுவோ
உங்கள் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம்
நிரந்தரமானதோ என்னவோ
இன்னமும் காயவில்லை அப்பா!
கணப் பொழுதும் எண்ணவில்லை
எம் கலங்கரை விளக்கே!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ...
ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
உங்கள் திருமுகம் எங்களை
விட்டு மறையுமா மறக்குமா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!