

அமரர். நாகலிங்கம் குணரட்னம்(மணி)
பிறப்பு: 31/04/1942 இறப்பு: 04/03/2014
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் குணரட்னம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமரர். குணரட்ணம் நாகேஸ்வரி(புகனம்)
பிறப்பு: 03/04/1950 இறப்பு: 09/02/2024
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரம் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் நாகேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அமரர் குணரட்ணம் நாகேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவு அஞ்சலி 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வாழ்ந்த நாட்களை
வசந்தமாக்கி விட்டுச்சென்ற அம்மா அப்பாவே!
உதிர்ந்தது நீங்கள் மட்டுமல்ல
உடைந்தது எங்கள் இதயமும்தான்!
நிழலில் இசைந்தாடி நினைவில் இழைந்தோடி
நெஞ்சில் உயிர் வாழும் தெய்வங்களே!
உங்களை மண் கடல் வான் உளவும் மறவோமே!
அன்புடை நெஞ்சங்கள் சிந்தனை இழந்து
என்புருக ஏங்கிட்டு பார்க்க
எம்மை துயரிலே மூழ்க வைத்து
பன்முகன் காலனோடு நீங்கள் சென்றதேனோ?
சோகத்தின் சுமைதனை
சுமக்கின்றோம் இதயமதில்
பாசத்தின் உறவுகள் நாம்
பரிதவித்து வாடுகின்றோம்
நேசத்தை மறந்து ஏன்
இருவரும்
நெடுந்தூரம் சென்றீர்கள்?