31ம் நாள் நினைவுநாள் பிள்ளைகளின் தவிப்பு
எமையீன்ற எம்தாயே ஏங்கிடவே எமைவிட்டு
எங்கு நீ சென்றிட்டாய்
பெரும் சொத்தாக எமை நினைத்து
பற்றோடு பாசமழை பொழிந்திட்டாய்
தீராத காதலுடன் வறுமையிலும்
எமக்காக தினமுழைத்தாய்
உன்பங்கு உணவினையும்
எமக்கூட்டி மகிழ்ந்திருந்தாய்
கண்ணின் இமைபோல
கவனமுடன் எமைக்காத்தாய்
ஒழுகுகின்ற கூரையெனினும்
ஒழுக்கமுடன் எமைவளர்த்தாய்
பழகுகின்ற எவருடனும்
பாசத்தால் நீ பிணைத்தாய்
உனையிங்கு தேடுகின்றோம்
மறுபடியும் வாராயோ !!!!!
உன்பிரிவால் வாடும் பிள்ளைகள்
அன்னாரின் மரணச்செய்திகேட்டு உடன் வந்து உதவிகள் செய்தவர்களுக்கும், நேரில் வந்தும் மற்றும் தொலைபேசி, முகப்புத்தகம் மூலம் ஆறுதல் கூறிய அன்புள்ளங்களுக்கும் மரணச்சடங்கில் கலந்துகொண்டு பலவழிகளில் உதவிபுரிந்தவர்களுக்கும், மலர் வளையம் அனுப்பியவர்களுக்கும் அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.