Clicky

தோற்றம் 11 FEB 1943
மறைவு 24 JUL 2020
அமரர் நடிகப்புயல் குமாரவேலு பூலோகசுந்தரம்பிள்ளை
கட்டிட ஒப்பந்தக்காரர்
வயது 77
அமரர் நடிகப்புயல் குமாரவேலு பூலோகசுந்தரம்பிள்ளை 1943 - 2020 சித்தன்கேணி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
11 FEB 1943 - 24 JUL 2020
Late Nadigapuyal Kumaravelu Poologasuntharampillai
......வம்சவிளக்கு ........... நம் வம்சாவளியில் பெரியப்பாவின் [பெரியய்யா ] மூத்த முதல் முத்தானவரே என் தந்தையின் பெறாமகனே எங்களது பெரியண்ணாவே பூலோகண்ணாவே./ மரணம் ஒரு நொடிப்பொழுதே உன் பிரிவோ ஓவ்வொரு நொடியும் வலியோடு வேதனையே நித்தமும் சிரித்தமுகத்தோடு ஊரில் அத்தனை சமூக வேலைகள் கோயில் வேலைகள் என இழுத்துப்போட்டு செய்யும் உன்தன் பெருந்தன்மை இனி எங்கே ? இறுதிக் கடமைகள் செய்யமுடிய பல உறவுகளுக்கு பிள்ளையாக சகோதரனாக செய்த கடமைவீரன் கலைநகர் தந்த பொக்கிச கலைஞன் பல்முக ஆற்றல் உள்ள உழைப்பாளி உணர்வோடு ஒன்றிய அற்புத நடிகன் மட்டுமல்ல கதாநாயகனும் கூட பெரியண்ணா உன் மென்மையான பேச்சும் துரு துருவென உந்துருளியில் ஓடித்திரியும் அந்த வேகமும் இனி எங்கே காண்பது ?27 வருடங்கள் நேரில் பார்த்து கதைத்து அண்ணா இருந்தும் #சொல்லம்மா தங்கச்சி என்றே அலையில் பேசும் பாசம் இனி எங்கே ? பிள்ளைகளும் வரமுடியா நிலை இதயம் வெம்பிக் கலங்குகிறது மௌனம் இங்கு கூடி கண்ணீர் பெருக்கெடுத்து வழிகிறதண்ணா நீங்கள் பேசமுடியா நிலையில் நாம் பேசினோம் உங்கள் கண்களில் ஓடிய கண்ணீர் சொன்னது உங்கள் இறுதிதருணங்களில் சொல்லமுடியா பல கதைகள். வையத்தில் வாழ்வாங்கு சிறப்பாய் வாழ்ந்து இன்று தெய்வத்துள் அடங்கும் உங்கள் ஆத்மா கம்பன் புலோ ஆதிவைரவர் துணையுடன் இறையில் சாந்தி பெறட்டும் அண்ணாவின் இழப்பில் துயருறும் பிள்ளைகள் சகோதரர்கள் [குடும்பத்தார்] துயரில் நாமும் கலந்து கரம் கோர்க்கிறோம் கண்ணீர் பூக்கள் தூவிய இதயம் கனத்த அஞ்சலிகள்./...ஓம் சாந்தி இவள் ... அன்புத் தங்கை [தமிழ்மகள் பரா] மருமகள் சுபாங்கி 2
Write Tribute