யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Raynes Park ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடேஸ்வரி சிவஞானசேகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள தேவிக்கு,
அன்புள்ள மாமிக்கு,
அன்புள்ள அத்தைக்கு,
அன்புள்ள மாச்சாளுக்கு,
அன்புள்ள மாமி பாட்டிக்கு.
நீங்கள் மண்ணில் மறைந்து
ஓராண்டு ஆயினும்
எங்கள் நெஞ்சில் நிலையாய் என்றும் நிறைந்துள்ளீர்கள்.
ஆயிரம் உறவுகள் அரவணைத்தாலும்
உங்கள் அன்புக்கு எவரும் ஈடாகுமா?
கனவுகளை நாங்கள் சுமந்து
கண்களில் நீர் சொரிந்து
கலங்குகிறோம் உங்கள் நினைவால்
இந்த நாள் எம்மால் மறக்கமுடியாத நாள்.
நாங்கள் மறக்க விரும்பாத துயர நாள்,
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களைக் காண உங்கள் குரல் கேட்க.
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
காரணம் தெரியவில்லை.
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
வாழ்நாள் உள்ளவரை உங்களை
எங்கள் மனம் நிழல்போல் தேடிக்கொண்டே இருக்கும்.
அதுபோல், நீங்கள் தரிசித்த ஆலயங்களும்,
உங்கள் பரிவாரங்களும்.
***************************************************************************
என் ஆருயிர் தேவிக்கு,
நீ எங்கே போய்விட்டாய்
நாமும் அங்கே வருவோம்
எம்நாளில் உன்னைத் தேடி.
அன்புள்ள உன் மச்சான் கணவர் சிவம்.
உனது பிரிவால்வாடும் அன்புமிக்க உன் துரை அண்ணா.
உனது பிரிவால்வாடும் அன்புமிக்க உன் மச்சாள் கருணா.