அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடமை காத்து பக்குவமாய் வழிநடந்தீர் இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவராய் நாணயமாய் நடந்தீர் ஏனோ இறைவன் இடை நடுவில் பறித்து விட்டான் துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய் அடைக்கலம் தந்த உம்மை ஆண்டவன் ஏனழைத்தான் பண்புள்ளோரைப் பல காலம் வாழ விடக்கூடாதென்றா??? என் செய்வோம் இறைவன் சித்தம் இது இனி கதைக்க முடியாத சோக நிலையோடு இங்கிருந்தே ஏங்கி அழுகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! அன்னாரின் பிரிவால் துயறுறும் குடும்பத்திற்கு ஆறுதலாக சில வரிகள் உங்கள் அப்பா எங்கும் செல்லவில்லை இங்கு தான் உள்ளார் உடல் மட்டும் தான் பிரிந்தது ஒழிய உயிர் பிரியவில்லை. உங்களின் மனங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று நிச்சயமாக இருக்கும் இதுவே உலகின் நியதி எமக்கும் என்றோ ஒரு நாள் இறப்பு நிச்சயம் என்பதை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும்.உங்கள் அப்பாவின் ஆசீர் வாதம் எப்பவும் உங்களுக்கு இருக்கும் விண்ணுலகில் இருந்து இறைவனின் அருளால் உங்களின் குடும்பத்தை ஆசீர் வதித்தும் வழி நடத்தியும் கொண்டு இருப்பார். ஓம் சாந்தி!