கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சாந்தாதேவி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:04/02/2023.
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட
அன்னையே!
நம்பமுடியவில்லை
ஓராண்டு கடந்ததை...
மாதங்கள் பன்னிரெண்டு
ஆனாலும்
ஆறாத்துயரில்
தவிக்கின்றோம்
ஆயிரம்
உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு
காட்ட
ஆறுதல் கூறிட யாரும்
இல்லை அம்மா...
புன்னகை புரியும் உங்கள்
முகம்
எமக்கு தினமும்
தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை
என்று நினைத்தபின்
எம்
மனம் கலங்குகிறது!
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது ஏனோ?
எம் உள்ளத்தின்
இருக்கும்
தெய்வம் நீங்கள்
அம்மா எத்தனை
ஆண்டுகள்
சென்றாலும், உன் பாசத்திற்கு
நாம் பட்ட கடன் தீராதம்மா!
உந்தன் உடல் மட்டும்
தான் பிரிந்து போனது
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் உயிர் உள்ள
வரை வாழுமம்மா?
உங்கள் ஆத்மா
சாந்தி அடைய
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்...
”திதி வெண்பா”
சீர்பூத்த செம்லர்வு பிலவ வருடம் தனில்
மார்மேவு மகரந்த வளர்பிறை தைத்திங்கள் சதுர்த்தசி திதியில்
ஏகாந்த பரமன் நடராஜாவின் துணைவியாய்
செவ்விதழ் செங்கதிர் ஒளிவீச கனகாம்பிகை பாதம் சாந்த (நாயகி)
அன்னாரின் முதாலம் ஆண்டு திதி 04-02-2023 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.