Clicky

90ம் நாள் நினைவஞ்சலி
பிறப்பு 08 MAY 1943
இறப்பு 07 DEC 2024
திரு நடராஜா பத்மநாதன் 1943 - 2024 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா பத்மநாதன் அவர்களின் 90ம் நாள் நினைவஞ்சலி.

எம்முயிர் தந்தையே எங்கள் 
உள்ளங்களின் ஒளிவிளக்கே 
சூரியனைக்கண்டு மலரும் தாமரையாய் 
உங்கள் அன்புமுகம் பாராமோ அப்பா!

எமக்கு துணையாய் ஆதரவாய்
சிறந்த வழிகாட்டியாய்
நீங்கள் என்றும் எம்முடன் வாழ்வீர்கள்!

இறையருளோடும் உங்கள் ஆசிகளோடும் 
எங்கள் வாழ்வின் கனவுகளும் 
வளர்ச்சிகளும் நிஜமாகும்.. 
எம்மோடு நீங்கள் என்றென்றும் 
கூடவே இருக்கின்றீர்கள் என்று 
இப்பூவுலகில் உளம் தளராது பயணிக்கின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் 
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!

தகவல்: குடும்பத்தினர்