யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா முத்தம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஓர் மாதம் ஆனதம்மா- உங்கள்
முகம் பாராமல் தவிக்கின்றோம் அம்மா!
நாட்கள் பல ஆனாலும்
எம் உயிர் உள்ள வரை
உன் நினைவுகள் எப்பொழுதும்
எம் மகத்தில் வாழுமம்மா!!!!
நீ மறைந்த நாளை நினைவேந்தும் வேளை
வாழ்ந்து சென்ற எமது வாழ்க்கையை
எப்படி
நெஞ்சம் மறக்குதம்மா!
இனி வர மாட்டீர்கள் எனத் தெரிந்தும் கூட
எப்போ வருவீர்கள் என ஏங்கும்
மனதில்
எப்போது உறைக்கப் போகுது
"இல்லை" எனும் உண்மை...?
அம்மா நேற்றுப் போல் உள்ளது
உங்கள் பிரிவால் மனம் வாடித் தவிக்கும்
அன்பு மருமக்கள், பெறாமக்கள், சகோதரி,
மற்றும் பேரப்பிள்ளைகள், அண்ணி,
மைத்துனர், மைத்துணிமார்கள் மற்றும் குடும்பத்தினர்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் புங்குடுதீவு கல்லடி அம்மன் கோவில் புனித தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அமரரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
6ம் வட்டாரம்,
புங்குடுதீவு.