

அம்மம்மா உங்கள் சிரிப்பினில் உலகத்தை கண்டேன், உங்கள் அரவணைப்பில் பாசத்தைக் கண்டேன், அம்மம்மா என்னும் சொல்லில் அம்மா என்னும் சொல் இருப்பதினாலோ என்னவோ, எம்மை அன்னையைப் போல் காத்தீர்களே உங்கள் சிரிப்பினில் புன்னகையை தந்தீர்களே, உங்கள் மழலை பேச்சினால் எம்மை சிரிக்க வைத்தீர்களே கதைகளை சொல்லி எம்மை வளர்தீர், தாலாட்டு பாடி என்னை உறங்க வைத்தீர் என் பிள்ளைக்கும் ஒரு தடவை பாடுவீர் என நினைத்தேன், ஆனால் நீர் தாலாட்டு பாடி கலைத்தாயோ? இப்பொழுது எம்மை பாடவைத்தாயோ? பூட்டி என அழைக்கும் முன்னே நீர் சென்றுவிட்டீரோ? ஒரு முறையாவது பூட்டனிடம் வருவாயோ? கடவுளை கும்பிட்ட கை வரவில்லை என்றோ? நீர் கடவுளை நோக்கி சென்றாயோ? என்றென்றும் உங்கள் நினைவுகள் மலர்ந்திருக்கும், நீங்கள் மீண்டும் வருவீர் என மனம் துடி துடிக்கும்!!! என்றென்றும் உங்கள் பாசத்திற்கு ஏங்கி தவிக்கும் உங்கள் பேத்தி நிவாஷினி(பூச்சி) Germany
Our heartiest condolences ! From Mrs Gunavathy Kandasamy and family