2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நடராசபிள்ளை வள்ளியம்மை
(இராசம்மா)
வயது 86
Tribute
10
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
வவுனியா மாமடுவை நெடுங்கேணிப் பிறப்பிடமாகவும், கணுக்கேணி மேற்கு முள்ளியவளை , கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசபிள்ளை வள்ளியம்மை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 07-05-2026
அம்மா இரண்டு ஆண்டுகள்
கரைந்ததம்மா உன் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
நீங்கள் எங்களை விட்டு அகலவில்லையம்மா!
எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும்
பிரியாத தாய் நீயம்மா!
அன்று எங்கள் அழுகையின்
அர்த்தம் புரிந்த அகராதி புத்தகம் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா!
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் உன்னை போன்று அன்பு
செய்ய யாரும் இல்லையம்மா இவ் உலகில்...
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our heartfelt Condolences. May her soul Rest in Peace.