
திதி:18/04/2025
வவுனியா மாமடுவை நெடுங்கேணிப் பிறப்பிடமாகவும், கணுக்கேணி மேற்கு முள்ளியவளை , கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசபிள்ளை வள்ளியம்மை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே!
ஆருயிர்த் தெய்வமே!
அகிலத்தை விட்டு ஆண்டவன் அடி சேர்ந்து
ஓராண்டு துன்பத்தின் விளிம்பில் நின்று
துடிக்கின்றோம் எங்கள் அம்மா
எங்கேயென்று தேடுகின்றோம்
அன்பாய் அரவணைத்த அன்னைமடி எங்கே?
ஆறுதல் சொல்லும் வார்த்தை எங்கே?
என்றென்றும் புன்னகை பூத்த பூ முகம் எங்கே?
இனிக்க இனிக்க கதை பேசும் அழகு எங்கே?
ஆலமரம் போல் உறவுகளைத் தாங்கி
தழுவிய கைகள் எங்கே?
எங்களை அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
வழிநடத்திய அந்த நாட்கள் எங்களை விட்டு
நீண்ட தூரம் நீங்கள் சென்றாலும்
ஆறாதம்மா உங்கள் பிரிவுத்துயர் - ஆறாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்!
Please accept our heartfelt Condolences. May her soul Rest in Peace.