
யாழ். மானிப்பாய் சோதிவேம்படி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராஜா விவேகானந்தராஜா அவர்கள் 15-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா அண்ணபூரணி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி புஸ்பமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலமனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,
கமலேந்திரன்(இந்தி- கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
யசோதா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ஐஸ்வரியா, பவித்திரா ஆகியோரின் அருமை பேரனும்,
காலஞ்சென்ற சரசானந்தராஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,
சத்தியபாமா, ரவீந்திரன், காலஞ்சென்ற அமரேந்திரன் மற்றும் தேவமனோகரி ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2020 திங்கட்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் சோதிவேம்படி ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.