யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bad Bergzabern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா விமலநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் அனைவரையும் அறாத்துயரில் ஆழ்த்திவிட்டு உன் சிறுவயதில் இருந்து இன்று வரையும் வந்து போகின்ற உன் புன்சிரிப்பும், அழகிய உருவமும், கண்முன்னே எல்லோருடைய மனங்களிலும் நீங்காத நினைவலைகளை தந்துவிட்டு உன்னுடைய குடும்ப உறவுகள் அனைவரையும் பிரிந்து இவ்விண்ணை விட்டு நீங்கா துயில் கொண்ட உன் ஆன்மா தெய்வத்தின் காலடில் அமைதிபெற்று சாந்தி அடைய கடவுளை பிராத்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
All of us your smile and your face, which has come and gone since your childhood till date, has left an indelible memory in everyone's mind. You will be separated from all your family relations and you will leave this sky. May your soul rest in peace at the feet of your God.