

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bad Bergzabern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா விமலநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தோற்றமும், மறைவும்
இயற்கை வகுத்த
நியதி யென்றாலும்
இன்பமும், துன்பமும்
வாழ்வின் மேடையில்
அரங்கேறும் நாடகமானாலும்
பார்த்து பழகிய கண்களும்
பேசிப் பழகிய வாயும்
கேட்டு மகிழ்ந்த காதுகளும்
நினைவுகள் பதித்த நெஞ்சும்
ஐயதோ அன்னாரின் பிரிவுத் துயரால்
தவிக்கிறதே குடும்பம்!
காலமே
விரைந்து வந்து
அவர்களும் ஆறுதல் தாராயோ
வானும் மண்ணும்
இடிந்தே விழுந்தன
காணும் நெஞ்சங்கள்
கலங்கிட அழுதன
விம்மிய நேரத்தில்
எம் மனது தேறிடுமோ?
காற்றோடு வந்த சேதி
மாற்றமாய் ஆகாதோ??
நெஞ்சமதில் நிலைத்து நின்று
எண்ணமதில் என்றும் நிலைத்து
வண்ணமலர் வாசமென
மனங்களிலே வீசி நின்றீரே!
கண்ணிமைக்கும் காலத்துள்
காலனுமைக் கவர்ந்து சென்ற
கொடுமையை எண்ணி
மனம் வெதும்பியே வாடுகின்றோம்...