10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராஜா தில்லையம்பலம்
முன்னாள் பிரபல வர்த்தகர்- பெரியதம்பி ஸ்ரோர்ஸ் இரத்தினபுரி நொதேன் றேடர்ஸ், யாழ்ப்பாணம், ஆட்டுப்பட்டித்தெரு, கொழும்பு-13
வயது 78

அமரர் நடராஜா தில்லையம்பலம்
1936 -
2014
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா தில்லையம்பலம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனைவரிடத்திலும் அன்போடும், பண்போடும்
பாசத்தோடும், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன்
நல்வழிகாட்டி எங்களை வளர்த்தெடுத்த
எமதருமை ஐயாவே..!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்