யாழ். கரவெட்டி கரணவாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா சிறிதரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:-03:02:2023
எங்கே சென்றாயோ.....?
வார்த்தைகளால் வருணிக்க முடியாத வலியில் நாம்
வலி சுமந்த வருடம் ஒன்றை வாழ்கிறோம்
உன் மறைவு எமக்கும் மரணமே தான்
நீ இல்லாத நாட்கள்
நித்தமும் வெறுமை
நீ எங்கேயென்று தேடுகின்றோம்
இங்கே தானே இருந்தீர்கள் எப்படி பிரிந்தாய்
விலகாமல் தொடர்ந்தாய்
வேதனை ஒன்றை தந்து விட்டுப்
போனதென்ன நியாயம்.
கணம் கணம் தேடுகின்றோம்
ஒரு கணமேனும்
கண்ணில் தோன்றாயோ.
காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!
வாழ்நாள் முழுவதும்
உங்களை நினைக்கும் போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம் கண்ணீராய்
கரைகின்றதே
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க ஏன்
விண்ணுலகம் நிரந்தரமாய்
விரைந்தீரோ?
நீங்கள் எமை விட்டுச்
சென்றாலும்
ஆறவில்லை எம்மனம் ஆண்டுகள் பல
கோடி சென்றாலும் ஆறாது
நம் நினைவுகள்...!
என்றும் உங்கள் ஆத்மா
சாந்தியடைய
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினர்.