Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 02 APR 2021
இறப்பு 02 APR 2021
அமரர் நடராஜா சிவதேவன் (சிவா)
தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் நிர்வாகசபை உறுப்பினர்
வயது Newborn
அமரர் நடராஜா சிவதேவன் 2021 - 2021 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். சிறுப்பிட்டி திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட  சிவதேவன் நடராஜா அவர்களின் நன்றி நவிலலும் அந்தியேட்டி கிரியை அழைப்பிதழும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும், உணவுகள் தந்து உதவியோருக்கும், இறுதிக்கிரியை நிகழ்வின் பொழுது தேவாரம், திருவாசகம், ஓதியோருக்கும், நினைவு மலரினை அச்சிட்டுத்தந்த அச்சகத்தினருக்கும்  எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் வீட்டுக்கிரியைகள்(புண்யாஹவாசனம்) எதிர்வரும் 26-04-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து அந்தியேட்டிக் கிரியை 01.05.2021 சனிக்கிழமை அன்று  மு.ப 11:30 மணிமுதல் பி.ப 16:00 மணிவரை கீழ் குறிக்கப்பட்டுள்ள முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசனத்திலும் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

மதியபோசனம் நடைபெறும் முகவரி:

Bombay Curry &Tandoory Restaurant
Hohenstaufen Str 2
60327 Frankfurt am Main.

முகவரி:
Ben Gurion Ring 86,
60437 Frankfurt am Main.
Telephone : 00496995116339
Mobile : 00491736616551


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.