Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 NOV 1943
இறப்பு 18 MAY 2015
அமரர் நடராஜா புஷ்பநாதன்
மாஸ்ரர், Co Operative Training School Lecturer, சுவிஸ் அகதிகள் சேவை மையம்(CFD), இலங்கை அகதிகள் தொடர்பாளர்
வயது 71
அமரர் நடராஜா புஷ்பநாதன் 1943 - 2015 Manippay, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, மட்டுவில் தெற்கு, சுவிஸ் Bern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா புஷ்பநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்பின் அடையாளச் சின்னம்
அரவணைப்பின் அழகு நிறை
உதாரணம் அணுவளவும்
கலப்படமில்லா ஆழ்ந்த அன்பு....... !!

வெற்றிகளை மட்டுமே
எமதாக்கிய விவேகம்.!
வாழ்க்கை முழுவதுமே
எமக்கான அர்பணிப்பு...!

அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை 'அப்பா'
என்பதில் அடங்கி விட்டது.....!!!
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில்
சென்றாலும் கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்

அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க
இறைவனடி சென்றீரோ

கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம்முன்னே
உங்கள் முகம்எந்நாளும்
உயிர் வாழும் அப்பா!

என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தினர்.!!

தகவல்: குடும்பத்தினர்