Clicky

9ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 NOV 1943
இறப்பு 18 MAY 2015
அமரர் நடராஜா புஷ்பநாதன்
மாஸ்ரர், Co Operative Training School Lecturer, சுவிஸ் அகதிகள் சேவை மையம்(CFD), இலங்கை அகதிகள் தொடர்பாளர்
வயது 71
அமரர் நடராஜா புஷ்பநாதன் 1943 - 2015 Manippay, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, மட்டுவில் தெற்கு, சுவிஸ் Bern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா புஷ்பநாதன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

அப்பா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம்
பாசமாய் எங்களை வளர்த்த
பாசத்தி்ன் பிறப்பிடமே
பார்க்குமிடமெல்லாம் எங்கள்
பார்வையுள் தெரிகின்றீர்கள்!

ஒன்பது ஆண்டுகள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகின்றோம்

கரைந்து கரைந்து
மணங் கமழும் சந்தனமாய்
உருகி உருகி ஒளி வழங்கும்
மெழுகு வர்த்தியாய்
உயர உயர ஏறிடவே
உயர்த்தி வைக்கும் ஏணியதாய்

சுமை சுமந்து நின்றாலும்
பழுவறியா சுமைதாங்கியாய்
வளமான வாழ்விற்கு
வழிகாட்டி வைத்தவரே

நீங்கள் சென்றது எங்கென்று
சொல்லாமல் ஏன் சென்றீர்கள்?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்