யாழ். கொக்குவில் கிழக்கு 103/10 பிறவுன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா நாகேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 19/06/2024 புதன்கிழமை
அன்பின் திருவுருவாய் அகத்தின் ஒளி விளக்கே- அம்மா
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்- அம்மா
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்- அம்மா
மாறாது ஒரு போதும் உம் கொள்கை நம் வாழ்வில்
என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதைவிட்டு அம்மா!!!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர்
எங்களை அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர்
உங்களின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்...