Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 16 JUL 1957
இறைவன் அடியில் 22 JAN 2023
அமரர் நடராஜா மோகனராஜன் (மோகன்)
வயது 65
அமரர் நடராஜா மோகனராஜன் 1957 - 2023 மூளாய், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hagen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா மோகனராஜன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி : 19-01-2026

எமக்கெல்லாம் நல்வழி காட்டிய தீபமே!
எம் குடும்ப விளக்கே!
நீங்கள் எம்மை விட்டுச் சென்று
மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டதே
நம்ப முடியவில்லை நாளும் தெரியவில்லை

உங்கள் இனிய அன்பான கதைகள்
எம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன
உங்கள் சிரித்த முகம்
அன்பான பார்வை கொண்ட தோற்றம்
எம் கண்களில் தெரிகின்றதே
எங்களிடமிருந்து உங்கள் உயிரைப் பறித்த
விதியை என்னென்று சொல்வது அப்பா

உங்களை நினைக்காத நாளுமில்லை
கண்ணீர் விட்டு அழாத நேரமுமில்லை அப்பா
நீங்கள் எம்முடன் கூடவே இருக்கின்றீர்கள் அப்பா
நீங்கள் மறையவில்லை என்றென்றும்
எங்களுடன் வாழ்கின்றீர்கள் அப்பா

உங்கள் ஆன்மா  இறைவனின்
திருவடி நிழலில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்