யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hagen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா மோகனராஜன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 10-02-2024
ஆண்டொன்று கடந்தது எம் ஐயா
ஆண்டவராய் இருந்தவரே எம் ஐயா
ஆண்டவனாய் போனீரோ எம் ஐயா
ஆறாதமனத்தோடு தவிக்கிறோம் ஐயா
வாழ்ந்தகாலத்தில் வளமாகவளர்தீர்
வாடியவதனம் கண்டால் புழுவாய்துடித்தீர்
வாழ்க்கையை மகிழ்வாக்க கற்றுத்தந்தீர்
வாழ்ந்தது போதுமென்றா விட்டுச்சென்றீர்
மகிழ்ச்சியை மட்டற்று பகிர்ந்தோம்
மனசெல்லாம் நிறைவாக வாழ்ந்தோம்
மரமாகவிருக்க நாம் நிழலிருந்தோம்
மரணமது உமையழைக்க அதிர்ந்தோம்
கடவுளுக்கும் ஒருபடி மேலேதான் அப்பா
கருணையிலே கடல்தானே அப்பா
களைப்புகளைக் காட்டாதவர் அப்பா
கண்காண தூரம் ஏன்போனீர் அப்பா
அம்மாவின் விழிநீர் இன்னும் ஓயவில்லை
அருமைபேரன்கள் விளையாட ஆளில்லை
அப்பா நீங்கள் இன்று எம்மோடில்லை
அந்த நினைவுகள் என்றும் மறப்பதற்கில்லை
உங்கள் ஆத்மா சாந்திபெற்று
சிவன்பாதம் சென்றடைய தளும்புகின்ற
விழிகளுடன் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி 🙏 சாந்தி 🙏 சாந்தி 🙏
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.