
“ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நமஹ”
யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா கனகரத்தினம் அவர்கள் 30-11-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா விசாலாட்சி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,
நவநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
டயாணி(லண்டன்), அசோக்(பஹரின்), துளசி(சுவிஸ்), கஜன்(பிராந்திய முகாமையாளர் Assetline) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்மசீலன், மலர்விழி, சாந்தகுமார், ரேவதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவின், பிரீத்திகா, ஷாரிணி, மர்வின், கெவின், றித்திகா, யெஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவமலர் மற்றும் கணேசலிங்கம், சறோசனா, மல்லிகாதேவி, தனேஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுசீலாதேவி மற்றும் மதனதாசன், றமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மாவதி, காலஞ்சென்றவர்களான பரம்ஜோதிநாதன், நாகராசா மற்றும் கணேசலிங்கம், இந்திரபவானி, சுதாநிதி, சிவாஜினி, ஜெயகௌரி(லண்டன்), காலஞ்சென்ற ஜெயசீலன் மற்றும் தயாளகுமார், நவரஞ்சன்(கனடா), ஜெயநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் நடைபெற்று, பின்னர் முற்பகல் 11:30 மணிளயவில் உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
அப்பாவின் இழப்பால் வாடும் உங்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாளாக.??? சிவா & ஹெலன்