Clicky

பிறப்பு 19 AUG 1951
இறப்பு 27 NOV 2018
டாக்டர் நடராஜா சிவானந்தன்
வயது 67
டாக்டர் நடராஜா சிவானந்தன் 1951 - 2018 உரும்பிராய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 29 NOV 2018 France

மருத்துவ நிபுணர் நடராஜா சிவானந்தனின் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்தோம். கடந்த ஓகஸ்ட் மாதம் லண்டன் சென்றிருந்தபோது அன்னாரை அவரது இல்லத்துக்குச் சென்று சந்திக்க முடிந்தது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவரை எமது குடும்பத்துடன் சென்று நேரில் சந்தித்து மகிழ்ந்த தினத்தை எண்ணும்போது ஓரளவு மனதுக்கு திருப்தி ஏற்படுகிறது. எனது அண்ணாவின் திருமணத்தின் மூலம் ஏற்பட்ட உறவுக்கு முன்னரே அமரர் சிவானந்தனை அன்னாரது 10வது வயதில் 1960-ம் ஆண்டில் சிறுவனாக கொழும்பு விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்தபோது முதன்முதலில் நானும் சிறுவனாக இருந்தபோது சந்தித்தேன். பூவுலகுக்குச் சேவை செய்ய வேண்டியவர்களையும் நல்ல உள்ளம் படைத்தவர்களையும் ஆண்டவன் இந்த உலகில் நீண்ட காலம் வாழ்வதற்கு அனுமதிப்பதில்லை எனும் கூற்றுக்கு மருத்துவ நிபுணர் நடராஜா சிவானந்தன் அவர்களின் மறைவு மற்றும் ஒரு உதாரணம்! அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது மனைவி பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்களுக்கு எமது குடும்பத்தவர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம். திரு. திருமதி இரத்தினம் கந்தசாமி. பாரிஸ் (யாழ் சித்தன்கேணி)

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 29 Nov, 2018