Clicky

பிறப்பு 26 JAN 1961
இறப்பு 23 DEC 2016
திரு நடராஜா ஞானகுமாரன்
Former Technical Officer- Dept. of Chemistry, University of Jaffna
வயது 55
திரு நடராஜா ஞானகுமாரன் 1961 - 2016 திருநெல்வேலி கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Rubeha Gnanakumaran 31 MAR 2023 United States

நித்தம் உமை நினைத்து நெஞ்சுருகி தீயால் சுட்ட வலி போல் கடந்து சென்றதப்பா -ஆண்டு பல நிழலாய் நீங்கள் இருந்தீர்கள் நிம்மதியின் நிஐமாய் இருந்தீரகள் தொலைத்து விட்டோம் உங்களை நீண்ட தூரம் நீண்ட நீண்ட தூரம் பிரித்துவிட்டான் எம் உயிரை நீ காட்டிய அன்பு நீ காட்டிய பாதை நீ களைந்த கவலைகள் நீ கதைத்த கதைகள் நீ களிப்பூட்டிய காட்சிகள் கண்ணை விட்டு நீங்காது என்கண் மூடும் காலம் வரை அப்பா இருந்திருந்தால் …….. அப்பா இருந்திருந்தால்……. அடிக்கடி புலம்பும் உங்கள் அன்பு மகனின் தவிப்பு நெஞ்சை பிழந்தது போல் நித்தம் வலிக்குதப்பா நீ வரமாட்டாய் என தெரிந்தும் ஏனோ வாசல்வழி தேடும் நெஞ்சு தினம் தினம் வலியாய் கனக்கிறது அன்பை தொலைத்து அகதியாய் அலையும் எம்பாதையில் ஆதரவாய் எம்முடன் கூடவரும் அன்பான உள்ளங்களிற்கு பல கோடி நன்றிகள்🙏🏽 நீ பிரிந்த நேரத்தில் நீ தவித்த தவிப்பு என் கண்முன்னே தினம் தினம் திணரச் செய்யும் வார்த்தைகளை தொலைத்து வலியுடன் வாழும் எம்வாழ்க்கை இறைவன் கட்டளைதான் கர்மவினை களைந்து கடவுளின் பாதம் வரும் காலம் வரும் வரை கண்ணீர் துளிகளால் உங்களுற்கு பிடித்த கவியை காணிக்கையாய் தந்து ஆத்ம சாந்திக்காய் பிராத்திக்கின்றோம். 🙏🏽🙏🏽🙏🏽 ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி

Tributes

No Tributes Found Be the first to post a tribute