2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாச்சியார் பொன்னுத்துரை
வயது 75
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை மானிப்பாய், கனடா Pickering ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாச்சியார் பொன்னுத்துரை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
இரண்டு ஆண்டுகள் சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கிறீர்கள்!
பாசமாய் எம்மை வளர்த்த
அழகான சொத்தே
சொல்லாமல் பிரிந்தீர்களே
திரும்ப முடியாத பாதையில்!
காலங்கள் உருண்டோடலாம்
ஆனாலும் கண்முன்னே நிழலாகும்
உங்கள் நினைவுகள்
ஒருபோதும் எம்மைவிட்டு அகலாது!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நிழலின் நிஜத்தைதேடி
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்