

!!!!! கண்ணீர்ச் சமர்ப்பணம் !!!!! ஊர் போற்றும் உத்தமரே -உம் உயிர் அறுத்து உறங்கியதேன், பார் போற்றும் பக்குவனாய்-இப் பரணியில் வலம் வந்தீர் ....., தேர் சரிந்த கோவில் போல் நீர் விழுந்து போனது ஏன் ..., யார் கண் பட்டதுவே -நல் விருச்சம் அது தான் சரிய ..!!! ஆல மர விருச்சம+தாய், அன்பு நிழல் தான் தந்தீர், ஊர் உயர வேண்டும் என்று, உயிர் உருகி உழைத்து வந்தீர், வெள்ளை வேட்டி தான் உடுத்தி, களங்கம் அற்ற சேவகனாய் -தமிழ் களப் பணிகள் தான் செய்து , கரைச்சிப் பிரதேச புரட்ச்சி நாயகனாய், எழுச்சி பெற்று இருந்து வந்தீர்..!!!! நெஞ்சடைத்து எம் இதயம், நெருடித் தவிக்கிறது , நீ சென்ற சேதி உற்று, வெந்தணலாய்க் கொதிக்கிறது, என்ன தவம் நாம் செய்தோம் , உம் அவனை நாம் பெறவே,-இப்போ கண் அதனை இழந்தது போல் , கலங்கித் தவிக்கின்றோம், எண்ணி அது மாளாது, -உம் இறப்பின் இதய வலி, புண்ணியம் செய்து விட்டாய், புதுப் பிறப்பு நீ எடுக்க, கண்ணியம் காப்பவனே, காத்திருப்போம் உனக்காக ., ஊர்..!!!!!!!!, ஆற்று மணல் ,அம்பலவி சேற்று வயல் ,தேருக்கோடி காட்டுமுயல் ,கவுதாரி எள்ளுக் காட்டு எலுமிச்சை கூட்டுறவுச் சங்கமது கூழாவடிச் சந்தையதும், -நீ போட்டு வைத்த நீள் வாய்க்கால் மாவட்டப் பொதுச் சேவை, அரசியலும், அரவணைப்பும், அன்புருகும் பேச்சதுவும் நாட்டு மக்கள் நலன் காப்பும், -உன் மூச்சாய்க் கொண்டவனே சேவைகள் போதும் என்று சென்றாயோ இடை நடுவில், காலச் சக்கரத்தின், கடு கதி வேகத்தில், -உன் தேகம் தொலைத்து விட்டு திரிகின்றோம் வேதனையில், நேற்று வரை எம்மோடு நின்று தெரிந்தவனே, -இன்று ஆற்று நீர் அதுவும் ஆலம் விழுததுவும் சேற்று மண் அதுவும் செம் மண் புழுதிகளும் காட்டும் குறி ஆனாய், -தமிழ் காவியத்தின் ஒளியனாய் .., சென்று வா எம் தலைவா.., தேசியத்தின் நல் வடிவே, ஊரே தலை வணங்கி , உனை அனுப்பி வைக்கின்றோம்,- உம் ஆத்ம சந்திக்காய் ஆண்டவனை தான் வேண்டி !!!!!! ஓம் சாந்தி .!!! ஓம் சாந்தி !!! ஓம் சாந்தி !!!!! உருத்திரபுரம் -கனடா.
miss you a lot siththappaa