

மணியண்ணையென்னும் மகத்துவம்! மனித வாழ்வு மற்றவர்க்கு முன்மாதிரியாக, வழிகாட்டுவதாக அமையவேண்டும். அவ்வாறன மகத்தான முற்போக்குச்சிந்தனையாளராக எம் நெடுந்தீவில் ஒலித்த மணியண்ணையவர்களின் மணிக்குரல் அடங்கிப் போய்விட்டதென்ற கொடுஞ் செய்தியை என்னால் நம்ப இயலவில்லை. மிகச் சிறந்த பண்பாளரான அவர் வாசிப்பதால் மனிதன் பூரணமடையலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம். "அரிய புத்தகங்களின் பக்கங்களுக்கு இடையே யதார்த்தமான மனிதர் வாழ்கின்றார்கள்" என்பதற்கிணங்க அமைதி, அடக்கம், அன்பு, சகமனிதரை மதித்தல், விட்டுக்கொடுத்தல், கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் என்கின்ற மிகச் சிறந்த மனித விழுமியங்களோடும், தலைமைப்பண்புகளோடும் கிளிநொச்சி மாநகர பிதாவாக அம் மாநிலத்தை கட்டமைத்த பெருமகனார். சிறிய வயதிருந்தே மார்க்சீய லெனினிசக் கோட்ப்பாடுகளோடும்,சித்தாந்தங்களோடும் அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தவர். அவரது எண்ணங்கள் நெடுந்தீவில் முற்போக்கு வாலிப இயக்கமாக ஓர் காலத்தில் என்னூரில் மிகப்பெருவெழுச்சியை உருவாக்கியிருந்தது. அத்தகு மிகச்சிறந்த வழிகாட்டியை, சிறந்த ஆலோசகரை, தமிழ்த்தேசிய நலன் விரும்பியை தமிழ் கூறு நல்லுலகம் இழந்து நிற்கின்றது. எல்லா விருட்சங்களையும் ஒன்றிணைக்கத்துடித்த அந்த அற்புதரின் சிந்தனைகள் என்றும் பொய்த்துப் போகாது.மகத்தான என் மண்ணின் மணியண்ணைக்கு என் ஆத்மார்த்த அஞ்சலிகள் !!
miss you a lot siththappaa