Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 NOV 1980
இறப்பு 25 JUL 2005
அமரர் மயூரன் சிவசுப்பிரமணியம்
யாழ். இந்துக்கல்லூரி- 1999 உயிரியல் பிரிவு
வயது 24
அமரர் மயூரன் சிவசுப்பிரமணியம் 1980 - 2005 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயூரன் சிவசுப்பிரமணியம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் பதினைந்து உருண்டோடி விட்டாலும்
எம் இதயங்கள் இருண்டு தான் இருக்குதய்யா.!
உன் கலங்கமற்ற முகத்தைப் பாராமல்- எம்
கண்கள் இருள் சூழ்ந்து போய் உள்ளதைய்யா..!

மகனே என அணைக்க முடியாத சோகத்தால்- எம்
மனம் இருண்டு போய் உள்ளதைய்யா.!
வாய் விட்டுச் சொல்லவும் வார்த்தையில்லை
மனம் விட்டுப் பேசவும் இன்று நீ இல்லை

என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது? 

 மொட்டாகி பூவாகி காயாகி கனியாகும்
வேளையில் காத்திருந்து படைத்தவன்
பழி தீர்த்தானோ ?

எங்களை தவிக்க விட்டு
நீர் தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண
வருவாயா ஓர் கணமே?

பிறந்து விட்டோம் இம்மண்ணில்
இறுதிவரை வாழ்வோம் நீ
விட்டுச் சென்ற நீங்காத நினைவுகளோடு... !

நித்தம் நித்தம் உன்னை நினைத்து
ஏங்கும் உன் அன்பு அப்பா, அம்மா, சகோதரர்கள்,
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.

தகவல்: குடும்பத்தினர்