யாழ். நல்லூர் தெற்கு அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் யோகராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!
இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!
மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!
நாட்கள் 31 மட்டுமல்ல உயிருள்ள வரை
நாமென்றும் அஞ்சலிப்போம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்....
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 09-09-2026 புதன்கிழமை அன்று நடைபெறும் அத்தருணம் திரு திருமதி சுந்தரலிங்கம் பிரேமளா குடும்பத்தினரின் நிதி அன்பளிப்பில் ஞானக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குகின்றார்கள்.