

மட்டக்களப்பு கல்லடிதெருவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் வரதராஜன் அவர்கள் 30-03-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், மட்டக்களப்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தங்கரெத்தினம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், மட்டக்களப்பைச் சேர்ந்த காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சந்தோஷலட்சுமி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜீவதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான வடிவேல், சச்சிதானந்தசிவம் மற்றும் மகேஸ்வரி, மகாதேவா, அரிகரன், பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சாரங்கபாணி, யோகராஜா, சியாமளா மற்றும் லீலா, சறோஜா, வித்தியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லண்டனைச் சேர்ந்த சிவபாதசுந்தரம், தவநேசன்(Ness, Solicitor), சாரதாதேவி, விஜயதேவி, அம்பிகாதேவி, சுஜீத்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லண்டனைச் சேர்ந்த மகேந்திர நாதன், சூரியகுமார், சித்தீஸ்வரன், பிரபாகரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய COVID-19 அரச அறிவுறுத்தலுக்கு அமைய இறுதிக்கிரியையில் பங்கேற்பதை தவிற்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மட்டக்களப்பிலே செல்வச செழிபில் வளர்ந்து இலண்டனில்சீரும் சிறப்புடன் வாழ்ந்து மக்கள் சேவைக்கா “ADVRO “ அமைப்புடன் சேர்ந்து மகேசன் சேவை செய்து இறைபதம் அடைந்த இனிய நண்பன் திரு வரதராஐன் அவர் கள் எங்கள்...