

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும். ஜேர்மனி Leinfelden-Echterdingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் ஸ்ரீ காந்தன் அவர்கள் 11-04-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குழந்தைவேலு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமாதேவி(தேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரதீபன்(பிரபா), பகீதரன்(பகி), தனுஜா(தனு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரூபகாந்தன்(கனடா), அருந்ததி(கனடா), சிவகாந்தன்(கனடா), கலைமகள்(கனடா), சந்திரகாந்தன்(லண்டன்), ஜீவகாந்தன்(மயில்- சுவிஸ்), ஜெயகாந்தன்(கனடா), வதனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுஜீனா, சிந்துஜா, சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவானி, மகாலிங்கம், வசுமதி, ஸ்ரீதரன், பாமழகி, ஜெயந்தி, ஜனனி, விஜயகுமார், முத்துமாரி, சிவானந்தலிங்கம், காலஞ்சென்ற குமாரவேலு, சீவரெத்தினம், வடிவாம்பிகை, சிவராசா, சிவனேஸ்வரி, கேமலதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற துரைராஜா, அன்னலெட்சுமி, சந்திரமதி, காலஞ்சென்ற செல்லையா, ஜானகி, காலஞ்சென்ற நடேசன், வினாசித்தம்பி ஆகியோரின் அன்புச் சகலனும்,
சஞ்சனா, பிரஜித், சஞ்சித், விஷ்வா, வைசாலி, வர்ஷா, சந்தோஷ், சமீரா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
நிகழ்காலச் சூழ்நிலை காரணமாக குடும்ப உறவுகள் மட்டும் இறுதிக்கிரியைக்கு அனுமதிக்கப்படுவர், அஞ்சலியில் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.