யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bunde வை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மதியாபரணம் அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் அப்பா...
எமன் உம்மைப் பிரித்தாலும்...
எமக்குள்ளே வாழ்கின்றீர்...
எமன் எம்மை அழைக்கும் வரை...
எங்களுடன் வாழ்வாய் அப்பா....
எமக்கு நீதானே எல்லாம்....
எல்லாமே செய்தாய் குறையொன்று மில்லாமல்....
எல்லோரும் உனைப் பற்றி இப்படித்தான் சொல்கின்றார்...
எப்படி அப்பா நீ அப்படி வாழ்ந்தாய்...
இப்படி வாழ்ந்தும் இறைவனிற்கு பொறுக்கலையே....
இறைவனிடம் நாம் கேட்பதெல்லாம்....
இறை அடியில் உனக்கு சாந்தி.. சாந்தி.. சாந்தி....
உன் பிரிவால் துயருறும்
உன் மனைவி மகள் மகன் மருமகன் பேத்தி.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட மயில்வாகனம் மதியாபரணம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
என்றும் அன்பான தேவா அக்கா, நாங்கள் நேற்றுதான் மதி அண்ணனின் இழப்பு செய்தியை கேள்வி பட்டோம். மிகவும் கவலை அடைந்தோம். மதி அண்ணனின் இழப்பால் நீங்களும் பிள்ளைகளும் அனுபவிக்கும் வேதனையை எங்களால் உணர...