Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 13 SEP 1935
மறைவு 19 OCT 2025
அமரர் மயில்வாகனம் மார்கண்டன் புவனேஸ்வரி மார்கண்டன்
வயது 90
அமரர் மயில்வாகனம் மார்கண்டன் புவனேஸ்வரி மார்கண்டன் 1935 - 2025 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை புட்டளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் மார்கண்டன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 07-11-2026

ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
 தீராத ஏக்கத்துடன் இன்னமும்
 துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
 ஒருமுறை காண்போமா...

தரணியில் எங்களை தவிக்கவிட்டு
தனியாக நீங்கள் மட்டும் எங்கு சென்றீர்கள்...
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம்
 இல்லாளுக்கு தலைவன் இல்லை
பிள்ளைகளுக்கு தந்தை இல்லை
சூரியனே! நீங்கள் இன்றி
எங்களுக்கு ஒளியும் இல்லை விடியலும் இல்லை...
 இறைவனோடு நீங்கள்...!
 கனத்த இதயத்தோடு நாங்கள்...!

உங்களை இழந்து வாழும் எங்கள் வலி
 காலத்தாலும் ஆற்றமுடியாதது தந்தையே...

உங்கள் ஆத்மசாந்திக்காக இறைவனை
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்...!

தகவல்: குடும்பத்தினர்

Photos