யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கு மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் விஜயரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கோடிகளாய் சேர்ந்து வாழ்ந்தோம் இவ்வுலகில்
இன்று தனிமையிலே வாடுகிறோம் உம் நினைவில்
மெளனத்தின் வாசலிலே மனக்குமிழி உடைகிறது
மறுபடியும் உயிர் வேண்டி மனமெல்லாம் அழுகிறது
ஆழமான அன்பையும் வேகமாக விதைத்து விட்டீர்
தேகமெல்லாம் அழுகிறது பாசமாய் உமை தேடி
நாட்களும் பறந்து செல்ல வருசமும் ஒன்றாக
வேர் இல்லா மரம் போல நடைபிணமாய் நாம் நின்றோம்
இதயத்தின் குமுறல் எல்லாம் இரவோடு கரைகிறது
சந்தனப் பேழையோடு சாம்பலாய் போகையிலே
கருகியது நாங்கள் அய்யா
இவ்வுலகம் விட்டு நீங்கள்
எங்குதான் போனீரோ- தவிக்கின்றோம் நாம் இங்கு
மலர்களாய் உமைத்தூவி விழிநீரால் தாலாட்டி
நகர்கிறது நாட்கள் இன்று
இறப்பு அனைவருக்கும் நியதி என்றாலும்
உங்களை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது
மறுபடியும் காணத்துடிக்கிறது
விரல் பிடித்து நடக்க கற்றுத்தந்தீர்
விழியோரம் கண்ணீரை ஏன் விட்டுச்சென்றீர்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
Deepest sympathy to Aachee aunty and children. Chithappa will be missed by each and everyone from our families