Clicky

மலர்வு 08 MAY 1975
உதிர்வு 30 JAN 2023
அமரர் முத்துத்தம்பி திருக்குமரன் (திரு)
வயது 47
அமரர் முத்துத்தம்பி திருக்குமரன் 1975 - 2023 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Siva.balachandran 01 FEB 2023 Canada

இழந்தோம்! இழந்தோம்! இழந்தோம்! உன்னை இழந்தோம்!   திருவனே!! மாமன் மகனே!! நகைச் சுவை பேசும் நண்பர்கள் கூட்டத்தின்  நாயகனே!!எங்களை எல்லாம் சோகத்தில்  தவிக்கவிட்டு எங்கு  ஓடி மறைந்தாய் நீ  !! சொல்லடா வாய் திறந்து மச்சி எண்டு !!கர்ணனோடு கொடை போயிற்று!! கவிக்கம்பனோடு  கவிதை போயிற்று!! உன்னோடு எங்கள் மகிழ்வும் போயிற்று மனை  விளக்கே !!எம்மனையை அலங்கரித்த உந்தன் புன் சிரிப்பும், இனிய குரலும் கேட்காது எம்மனங்கள் வாடி  வதங்கிப்போனதடா! அஞ்சுகம் பெற்றெடுத்த மாணிக்கமே!! முத்துகிளியின் பாசமிகு கண்மணியே!! சுமித்திராவின் சோதரனே சுந்தர வடிவழகா! திருவா! திருவா! என வாய் நிறைந்து அழைத்திடும் மாமியாம் எம் அன்னை மறைந்தபொழுதும், அன்பே வடிவான  எம்மூத்த  சோதரன் மறைந்த பொழுதும் சோகத்தில் எம்மோடு சேர்ந்து நின்று பலம் தந்த உன்னை எப்பிறப்பில் காண்போம் இனி.பாசத்தின் வலிமையை உன் பிரிவு  எங்கள் விழிகளில் ஏக்கமாய் விதைத்து விட்டுப்போனதடா!எம்வீரம் போனதடா!!வில்லு முறிந்ததடா!!வெற்றி போனதடா!! எல்லாம் வெறுமையாய் பழங்கதையாய் ஆனதுவே!கட்டியணைத்திடும் பிள்ளைகள் எங்கே? கட்டிய மனையாள் எங்கே? உற்றவர்கள் எங்கே ? நண்பர்கள் எங்கே ? இனத்தவர்கள் எங்கே ? ஊரவர்கள் எங்கே ?எல்லோரையும் விட்டுச் செல்ல மனம் மாறி மரணத்தின் தடத்தில் நடந்து சென்றாயோ?  கண்கள் கனத்து களைத்து விழி நீர் சொரிகின்றோம்.நீ வருவாயென வழிமேல் விழி வைத்துகாத்து நிற் கின்றோம்!! நீ வருவாயா?இன்னொரு பிறப்பு உண்டேங்கில் பிறந்து வா?எழுதிச் செல்லும் விதியெனும் காலன் கைகள் உன்னைக்களவாகக் கவர்ந்து சென்றதேனோ? சொல்! சொல்! உன் உடல் தான் மறைந்தது.உன்னைப் பற்றிய இனிய நினைவுகள் எங்கள் வாழ் நாள் பூராவும் எம்முடன் வாழும்..வானும், மண்ணும், சூரியனும், சந்திரனும், அலை கடலும் உள்ளவரை உன் நாமம் மறந்து போகாது திருக்குமரா!!அதுவரை முத்துத்தம்பி- யோகராணியின் ஆசைப்புதல்வனே ஆழ்ந்த துயில் கொள்!! உனது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல திருச்சீரலைவாய் தேசிகனாம் கந்தவேள் பெருமானைப் பணிந்து வணங்கி நிற்கின்றோம்!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! Siva.Balachandran& Family(Canada, Pungudutivu)