5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முத்துச்சாமி அப்பாசாமி
முன்னாள் களஞ்சியம் பொறுப்பாளர் - நெல் சந்தைப்படுத்தும் சபை துணுக்காய், முல்லைத்தீவு , கரடியனாறு
வயது 75
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புத்தூர் வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துச்சாமி அப்பாசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
இதயம் ஏற்க மறுக்கிறது எம் தந்தையே...
உருண்டு ஓடி விட்டன ஐந்து வருடங்கள்
எத்தனை வருடங்கள் ஓடினாலும் ஏற்குமோ
எம் மனம் உங்கள் பிரிவை...
ஆலமரமாய் இருந்தீர்கள் ஆனந்தமாய் நாம் இருந்தோம்
ஆலமரம் சரிந்ததனால் ஆனந்தமும் குறைந்தது அப்பா
உருவம்தான் இல்லையப்பா உணர்வாய் உடன் உறைகின்றீர்கள்
உயிருடன் எம்மோடு உடனிருந்து வழி நடத்துகிறீர்கள்
நீங்கள் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்
ஐந்து வருடங்கள் ஓடி முடிந்தாலும்
ஆறாது ஆறாது உங்கள் பிரிவு
உங்கள் நினைவுகள் மட்டும் முடியாமல்
துயரங்களை சுமந்து நிற்கும் உங்கள்...
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்