யாழ். சுண்டுக்குழி கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரான்ஸ் Paris,ஜேர்மனி Stuttgart Sindelfingen ஆகிய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்ரன் முத்துராஜா மேரி திரேசம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஓராண்டு ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா??
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...!
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா!
நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அன்பு முகம்
எம் நெஞ்சில் நிலைத்து நிற்கும்...
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்!
பிள்ளைகளே நான் அம்மா பேசுகிறேன் நான் உங்களை தனியாக விடவில்லை உங்களை அறுவராக அவனிக்குத் தந்தேன்.
அக்னியில் உங்கள் வாழ்வின் சிறப்புக்கள் மிகவும் மகிழ்ச்சி. அப்படியே தொடர்ந்து வாழ எனது ஆசிகளை உங்களுக்கு தருகிறேன்..
எப்படி நான் உங்களை தனியாக விடவில்லையே அதுபோல் நீங்களும் என்னை தனியாக விடவில்லை. ஆச்சியை
இழந்தபோது குழந்தைகளாய் அருகிருந்தீர்கள். உங்கள் அப்பாவை இழந்தபோது இருவர் அங்கிருந்தீர்கள்.. என் அக்காவை உங்கள் அன்ரி இறந்த போது ஓடிவந்தீர்கள்..
தனியே என்னை விட்டுவிடாமல் இங்கே அழைத்து வந்தீர்கள். பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் பெறமக்கள் என கடந்த 20 வருடங்களாக உங்களுடன் சேர்ந்து வாழும் மகிழ்ச்சியை கொடுத்தீர்கள்
அதற்காக இறைவனுக்கு நன்றி.. நான் இன்று உங்களை விட்டு சென்றாலும் நான் என் வானக தந்தை வாயிலாக உங்களை கண்ணும்
கருத்துமாக காப்பேன்.
எனது இவ்வுலக வாழ்நாட்களில் நான் யாரையாவது தெரிந்தோ தெரியாமலோ இயலாமைமாலோ கோபத்தாலோ உங்களிடமும் இறைவனிடம் மன்னிப்பை வேண்டுகிறேன்.
என்வாழ்நாளில் நான் சந்தித்த அனைத்து உறவினர்கள் நண்பர்கள்,அயலவர்கள். எனக்கு எவ்வளவோ உதவிகளை செய்துள்ளீகள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
இப்போது நான் வாழ்ந்த தேசத்தவர்கள்..எங்கோ பிறந்த என்னை இங்கே வாழவைத்த பிரான்ஸ் தேசத்தவர்கள் இன்று என்னை வழியனுப்ப வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளையும் ஆசிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
யாரும் என் பிரிவையிட்டு கலங்கவேண்டாம். என்னை படைத்த இறைவன் எனக்கு நெடிய ஆயுளைத்தந்து காத்தார். இப்போது அவர் அழைப்பில் அவரிடம் செல்கின்றேன்.
மண்ணிருத்தே பிறந்தாய் மண்ணுக்கே திரும்புவாய் என்ற இறையும் இயற்கையுமான உண்மையில் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் உங்கள் வாழ்வில் இறைவார்த்தைகளை கடைப்பிடியுங்கள். நன்றி பிள்ளைகளே.. நன்றி
மருமக்களே.. நன்றி பேரர்களே,நன்றி
பெறாமக்களே.. நன்றி
பூட்டப்பிள்ளைகளே. நன்றி
இங்குள்ளவர்களே,நன்றி
என்னை நினைந்துள்ளோரே. அனைவருக்கும் இறையாசிகள் உண்டாகட்டும்..!