

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துமாணிக்கம் இராஜசிங்கம் அவர்கள் 30-12-2020 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துமாணிக்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம்(முதலியார்), ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஞானம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கெளரி(கனடா), காலஞ்சென்ற ஸ்ரீதரன், கலாரஞ்ஜனி(பிரான்ஸ்), லதாரஞ்ஜனி(ஆரம்பப்பிரிவு ஆசிரியை-புலரி கல்வி நிலையம், சண்டிலிப்பாய்), காலஞ்சென்ற ஸ்ரீஞானராஜ், டனராஜ்(சத்திரசிகிச்சை நிபுணர்- கந்தரோடை), ஹெமன்ரன்(கணித ஆசிரியர்- வ/C.C.T.M.S- வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சர்வேஸ்வரி(சண்டிலிப்பாய்), தயாபரசிங்கம்(ஜேர்மனி), பராபரசிங்கம்(கனடா), பரயோகசிங்கம்(லண்டன்), துரைசிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோபிகிருஷ்ணா(கனடா), கிருஷ்ணமூர்த்தி(சண்டிலிப்பாய்), தயா(கந்தரோடை), கெளரி(வவுனியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,
துஷிதா, கிருஷாந்த், நிரோஷாந்த், நிலக்சினி, நிஷிஷன், நிஷாஷினி, யுலக்சினி, கோகுலக்சன், டனுலக்சன், டினோஜன், சுதர்ஜன், ஹரிஷன், கிரிஷா, ரோஷன், தன்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,
மயிலா அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-12-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணிவரை இல. 94/1 கல்வளை வீதி, சண்டிலிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, சண்டிலிப்பாய் திரேசம்மாள் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பெரியவிளானில் அமைந்துள்ள யுவானியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Very sad to hear annai's demise. Children & Siblings accept our heartfelt condolences and sympathies. His services will be remembered always.