

-
20 JUN 1963 - 24 JUN 2019 (56 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Toronto, Canada சுவிஸ், Switzerland
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துலிங்கம் திருநாவுக்கரசு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்
தந்தைக்கு தந்தையாய் அண்ணனுக்கு அண்ணனாய்
எமை தோள் சுமந்து நடந்தவரே....!
வந்த தோல்வியெல்லாம் எதிர்த்து நின்று
வேள்வி செய்து எமை வளர்த்தவரே.....!
கால் வலித்தும் கண் வலித்தும் எமை
கரைசேர்க்க கடைசிவரை உழைத்தவரே......!
ஒளிவிட்டு நாம் இன்று உயர்ந்து எரிய
உன் உருவத்தையே எமக்காய் உருக்கியவரே.....!
இன்று கண் மூடிய பின்னும் எம்
முன் கவிதையாய் சிரிக்கின்றாய் ......!
நீ இருக்கின்றாய் எமக்கு
என்ன குறை என்று இருந்து விட்டோம்
நீ இல்லை என்ற
இடைவெளிக்குள் எமக்குள் பூச்சியத்தை உணர்ந்து விட்டோம்...!
விண் கேட்க அழுகின்றோம் விடையின்றி தவிக்கின்றோம்
வீரநடை போட்டு மீண்டும் வருவாயென....!
ஒவ்வொரு செயலிலும் உங்கள் முகம் தெரிய
ஒவ்வொரு நிகழ்விலும் உங்கள் அகம் ஒளிர
ஒவ்வொரு கணமும் நேற்று வரை ஒளிமயமானதே.....!
ஒவ்வொரு நொடியும் கண்ணீர் கரைய ஒவ்வொரு
உறவும் உங்கள் கதைகளை நிறைக்க -இன்று
உயிரை கண்ணீர் கடத்தி போகிறதே
உயிருக்குள் தீயை கொளுத்தி போகிறதே....!
எங்கள் இல்லத்தின் நாயகனாய் எங்கள்
பெரும் வாழ்வில் போதகனாய் எம்முள்
வாழ்ந்த எங்கள் குலவிளக்கே ......!
நித்திய வாழ்வில் நிறையாது நீ
வாழ்ந்து எம் வயிறுகள் பற்றி எரிய
பாதியிலே பறந்துவிட்டாய்...!
சத்திய சிவனின் சக்தியில் நீ
முக்தி பெற சரணடைந்தாய் எனவெண்ணி
தலைதாழ்த்தி தொழுகின்றோம்......!
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி....!
எங்கள் குடும்ப ஒளிவிளக்கின் துயர் நிகழ்வில் கலந்து கொண்டு அனுதாபங்களை செலுத்தியவர்களுக்கும், மலர்ச்செண்டுகள், மலர் வளையங்களை அனுப்பி வைத்தவர்கள், இரங்கல் பதிவுகளை வெளியிட்டவர்கள், நேரில் வந்து ஆறுதல் கூறியவர்கள், தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஆறுதல்களை, இரங்கல்களை தெரிவித்தவர்கள் மற்றும் எங்கள் குடும்பத்தவரின் இறுதிக்கிரிகை சிறப்புற நடைபெற சகல வழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எங்கள் குடும்பம் சார்பாக மனமுவந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். உங்கள் பிரிவால் உயிர் தொழும் மனைவி, சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனர்கள், மைத்துனிமார், மருமக்கள் மற்றும் பெறாமக்கள்.
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

I miss you my friend. I cannot believe you passed away. We always talk about you at the work place. Condolences to the family.