31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 29 AUG 1943
மறைவு 10 JUL 2022
திருமதி முத்துலட்சுமி காராளசிங்கம்
வயது 78
திருமதி முத்துலட்சுமி காராளசிங்கம் 1943 - 2022 இராசாவின் தோட்டம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட முத்துலட்சுமி காராளசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

31 நாட்கள் கடந்ததுவே
உங்கள் பளிங்கு முகம் பார்க்காமல்
உங்கள் பாசக் குரல் கேட்காமல்
உங்கள் நினைவோடு நாம் வாழ்ந்து
31 நாட்கள் ஆனதே அம்மா!

எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும்
உங்கள் நினைவு மாறாது
உங்கள் உறவுகள் மறக்காது

கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!

இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…

நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 13-08-2022 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை St John’s Centre, Station Approach, Stoneleigh, Epsom KT19 0QZ, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.