யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, இல. 352, மல்லாவி 4ம் யுனிற் திருநகர் யோகபுரத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு பேரம்பலம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
நான்கு கடலும் நடு நடுங்கி
வீழ்ந்தே
பணியும் விறல் நெடுந்தீவில்
முத்துக்குமாருவிற்கு முதல் உதித்த சூரியனே!
தீவுதனை கடந்துவந்து மல்லாவி வந்துதித்த வரப்புதல்வா
என்நாளும் மல்லாவி
உம் வாழ்வின் வரலாறு !!!
விவசாயமும் எத்தனையோ
தொழில்வளமும் பெருக்கி
தன்வாழ்வின் பொற்காலம்
என்நாளும் மல்லாவி என்றுரைப்பார்!
விண்ணேறி வேற்றுநிலம் வந்திறங்கி
வாழ்வுதனை பல காலம் கொடுக்கவில்லை
பாவியவன் பறித்தெடுத்தான் ஐயோ!
இன்நாளும் மல்லாவி காத்திருக்கு
என் நாள்வருவாரென்று!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கடலில் நடைபெற்றது. வீட்டுக்கிரிகை 19-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:-
34 Rue Marcel Broucxau,
93000 bobigny,
France.
எமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கின்றோம்.