திதி : 27-06-2024
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, இல. 352, மல்லாவி 4ம் யுனிற் திருநகர் யோகபுரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துக்குமாரு பேரம்பலம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே எங்கள் ஆருயிர் அப்பா
ஆண்டு இரண்டு ஆனாலும் எங்கள் நெஞ்சங்களில்
என்றென்றும் நிலையாய் நிறைந்த அன்புத் தெய்வமே
ஆசைத் தந்தையே
உங்கள் புன்னகை முகத்தை கண்டாலே போதுமப்பா
உள்ளமெல்லாம் உவகை கொள்ளும்
உலகமே மறந்து விடும்
பிரிந்து நீங்கள் சென்றெமக்கு
பெருந்துயரைத் தந்தாலும்
நாம் வருந்துகின்றோம்
உங்கள் நினைவால்
வந்து விடுங்கள்
வையகத்தில்
ஆருயிர்க் கணவராய்
அருமைமிகு அப்பாவாய்
பண்பான மாமாவாய்
பாசமிகு பேரனுமாய்
அன்பான உற்றார் உறவுகளும்
ஊர் மக்கள் எல்லோரும்
நாம் கண் துஞ்சாது
உமை காண்பதற்கு காத்து உள்ளோம்
எம்மை வந்து வாழ்த்தி விடுங்கள்
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும்
நிகருண்டோ இவ்வுலகில்
வீசும் காற்றினிலும் நாம் விடும் மூச்சினிலும்
எட்டுத்திக்குகளிலும்
தினமும் வாடுகிறோம் அப்பா
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்
எத்தனை ஆண்டு ஆனாலும்
எம் ஆழ்மனதில் நீங்கள் இருப்பீர்கள்
நீண்டு செல்லும் காலமெல்லாம் எங்கள்
நெஞ்சமதில் நிலைத்திருப்பீர்கள்
என்றும் அழியாத நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ...
எமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கின்றோம்.