
மன்னார் பரப்புக்காலைப் பிறப்பிடமாகவும், கட்டாடுவயல் இலுப்பைக்கடவையை வதிவிடமாகவும், உப்புக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் முத்துக்குமாரு கனகம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நுரைகள் உடைகின்ற கரையில்
வெண்ணிறம் பரப்பும் ஆழியின் அலையென
ஆண்டுகள் மூன்று ஓடித்தான் ஒழிந்தாலும்
ஆலதன் நிழலை அன்றில்கள் மறப்பதில்லை!!
எது பசுமை?
இருத்தல் மட்டுமா? இல்லை
எத்தனை ஆண்டுகள் இன்மையில் கழிந்தாலும்
நம் நினைவின் அடுக்குகளில் சேகரமான
வாழ்வும்,
காட்டிய திசைகளும்,
கட்டியெழுப்பிய வாழ்வியலும்,
சுட்டிய நெறிகளும், இன்னும் அத்தனை வழிப்படுத்தல்களும்
வானும் அதனுள் உறையும் நிலவும் போலன்றோ?
இல்லை
நீங்கள் என்று இறந்துவிடவில்லை !!
இருக்கிறது இன்னமும்
உங்கள்
வளமும் வழிகாட்டுதல்களும்.
விதைகளை ஊன்றி
வீரியம் மிகு விருட்சங்களை வளர்த்தீர்
திசையெங்கும் வாழ்கிலும்
நிழல்சிந்தி வாழ்வோம்
நிலம்
சொல்லி நிமிர்வோம்!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..!