யாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Eastham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரசாமி கைலாசநாதன் அவர்கள் 23-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைலாசம் சின்னம்மா தம்பதிகள், குருநாகல் மாவட்டம் கல்கமுவைச் சேர்ந்த கிருஷ்ணசாமி சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான யாழ் பெருமாள் கோவிலடியைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி பர்வதவர்சினி தம்பதிகளின் அன்பு மகனும்,
பிரியன்(Senior technical Consultant For a Software Company- London), சூரியன்(Christ Church Of Canterbury University) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவலோகநாதன், சுவாமிநாதன், காலஞ்சென்ற கைலேஸ்வரி, கனகேஸ்வரி(கங்கா), ரவீந்திரநாத், அமரநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
சிதம்பரநாதன்(பாலா), காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி, விக்னேஸ்வரி, சரோஜினிதேவி, வனிதா, சிந்தியா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவர் இன்று எம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டாலும்,இவரது இளமைக் காலத்தில் இவர் தனது இனவிடுதலைக்காக செய்த தியாகம் என்றும் நினைவு கொள்ளப்பட வேண்டியது.இளமையில் சிறை சென்று தன் இனத்திற்காக பல இன்னல்களை...