Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முத்துக்குமாரசாமி திருஞானசம்பந்தபிள்ளை
சைவப்புலவர் , ஓய்வுபெற்ற அதிபர்- யாழ் இந்து ஆரம்ப பாடசாலை, யாழ் வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை, யாழ் இணுவில் மத்திய கல்லூரி, தலைவர்- அகில இலங்கை சைவப்புலவர் சங்கம்
விண்ணில் - 10 DEC 2020
அமரர் முத்துக்குமாரசாமி திருஞானசம்பந்தபிள்ளை 2020 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி: 14/12/2025

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரசாமி திருஞானசம்பந்தபிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அணையாத தீயினில்
அலையான சுவாலையாய்
ஐந்து வருடங்களாகியும்
அனல் கக்கி எரியுதையா 

எங்கள் அப்பாவே உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குல விளக்கே

நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்

உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் ஐந்து வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்

உங்கள் நல்ல முகம் மறைந்ததென்று
சொல்ல முடியவில்லை எங்கள் சோகத்தை
மெல்ல முடியவில்லை உம் நினைவுகளை

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 10 Dec, 2020
நன்றி நவிலல் Sun, 10 Jan, 2021