யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரசாமி திருஞானசம்பந்தபிள்ளை அவர்கள் 10-12-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரசாமி, காமாட்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சௌந்தராம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
ஞானசுந்தரன்(பிரதிக்கல்விப் பணிப்பாளர்- யாழ்ப்பாண கல்வி வலயம்), ஞானசுந்தரி(நாட்டியகலைமணி- லண்டன்), பாலசுந்தரி(ஆசிரியை- யாழ் இந்து மகளிர் கல்லூரி), யாமனசுந்தரி(சுவிஸ்), சிவகலை(ஆசிரியை- யாழ் இந்து ஆரம்ப பாடசாலை), கார்த்திகா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகிர்தா, உமாபதிகுமார்(லண்டன்), மோகன்ராஜ்(ஆசிரியர்- யாழ் ஸ்கந்தவரோதயா கல்லுரி), சத்தியலிங்கம்(சுவிஸ்), ஜெயசங்கர், முருகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வாலம்பிகை, பஞ்சாட்சரம், காலஞ்சென்ற சிவகாமசுந்தரி, பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிற்சபேசன்(கனடா), வைத்தீஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கலைவாணி(கனடா), தாமரைச்செல்வா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அண்ணனும்,
சரவணன், தணுசியா, குருபரன், சிவகுமார்(லண்டன்), சேந்தன், மேனகா, சரண்யா, சயந்தனி, மதுராகினி(சுவிஸ்), கோபிசன், சோபனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2020 வியாழக்கிழமை அன்று கொக்குவில் இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஞானப்பால் உண்ட குழந்தை 'தோடுடைய செவியன்' என ஆரம்பித்து தேவாரப்பாடல்களை பக்கதர்களுக்காக உதிர்த்துத்தள்ளியது. தந்தையிடம் சைவமகிமை என்ற பாலை உண்ட குழந்தை திருஞானசம்பந்தப்பிள்ளை, சைவத்தோடு தவறாது...