யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா கனகலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா சிரித்த
உங்கள்
முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா?
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே
நாம் வாழ்கின்றோம்-ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும்
வேளையில்
நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உங்கள் நினைவால் வாடுகிறோம் அப்பா!
உங்கள் இழப்பை ஈடு செய்ய
முடியாமல்
தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து
வருவீர்களோ எங்கள் அன்பு அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், 6ம் திகதி நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.