

அன்பு அப்பாவுக்கு எங்கள் இதய அஞ்சலிகள்
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா கனகலிங்கம் அவர்கள் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்பதை கனத்த இதயத்துடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.அம்பி, ரகு, விஸ்ணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr.மத்தியூ, யனுசா, காண்டீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அரன், டெவின், விவின், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, அன்னலிங்கம், மகேஸ்வரி மற்றும் சுந்தரலிங்கம், இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் மறைவு அவரின் குடும்பவழியையும், மனைவி வழியையும் சேர்ந்த சகோதரர்கள், மைத்துனர்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எல்லோருக்கும் பெரிய இழப்பாகும்.
எங்கள் அப்பா மனிதநேயமிக்கவர், வரலாறு, விஞ்ஞானம், சமூகம் என்பவற்றில் மிகுந்த பற்றுள்ளவர், அவரைச் சூழ்ந்துள்ள உலகத்தை மேம்படுத்த ஆசைப்படுபவர்.
அவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்ததுடன், தனது உடம்பை ரொறன்ரோ பல்கலைக்கழக வைத்திய பீடத்திற்கு ஆராய்ச்சிப் படிப்புக்காக சுய விருப்பத்துடன் ஈகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது அப்பாவின் வாழ்க்கையை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதற்கான நிகழ்வு புரட்டாதி 6ம் திகதி 2025 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை Highland Funeral Home - Markham Chapel 10 Cachet Woods Ct, Markham, ON L6C 3G1, Canada எனும் மண்டபத்தில் இடம்பெறும், அன்னாரின் நினைவலைகளை பகிர்ந்து கொள்ள விரும்புவர்களை பி.ப 03:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை அன்புடன் வரவேற்கின்றோம்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.